News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரசியல் சாணக்கியன் அமித் ஷா 2026 தேர்தலில் முழுமையாகக் களம் இறங்கிவிட்டார். அவர் திமுகவை மண்ணைக் கவ்வ வைப்பார் என்றெல்லாம் ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவந்தவர்கள் எல்லாம் இப்போது தேமுதிக கூடாரம் மாறியதைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.

டிடிவி தினகரனைக் கொண்டுவந்தவரால் பிரேமலதாவை சரிக்கட்ட முடியவில்லை, ஓபிஎஸ், ராமதாஸை உள்ளே கொண்டுவர முடியவில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணியில் பங்கீடு எப்படியிருக்கும் என்று அரசியல் கணக்கு போட்டுவருகிறார்கள்.

கூட்டணியில் கமல்ஹாசன், பிரேமலதா இணைந்திருப்பதால் திமுக அமைத்திருப்பதனால் சென்ற முறையை விட இம்முறை நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

அதனால் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களது தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க  வேண்டியிருக்கும். இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்று உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி காங்கிரஸ் – 25, விசிக – 7, தேமுதிக – 7, மதிமுக – 6, ம. கம்யூனிஸ்ட் – 6, இ. கம்யூனிஸ்ட் – 6, மமக – 4, முஸ்லிம் லீக் – 4, மநீம – 3, கொங்கு – 3, தவெக 2, எஸ்டிபிஐ – 1.அதோடு கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள். இதில் இன்னும் சில மார்ற்றங்கள் வரும் என்பதால் திமுக 160 தொகுதிகள் மட்டுமே நிற்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link