Share via:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக
கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டிவிடப்பட்டது. இந்த முறையும் அப்படித்தான் நடக்கும்,
அதனால் நம்முடன் கூட்டணிக்கு கண்டிப்பாக வருவார்கள் என்று எதிர்பார்த்தார் விஜய். ஆனால்,
இன்று கதை மாறிவிட்டது. ஆளும் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது.
இப்போது காங்கிரஸ் கட்சியும் திமுகவை விட்டு
வெளியே வராது. ஆகவே, விஜய்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சீமான். விஜய் கட்சி தொடங்கிய நாள் முதலாக விஜய்யை கூட்டணிக்கு
சீமான் அழைப்பு விடுத்துவருகிறார். அதாவது நான் சினிமாவிலும் அரசியலிலும் மூத்தவன்.
எனவே, என்னுடன் வர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
எனவே, சீமானுடன் கூட்டணி வைத்துவிடலாம் என்று
யோசிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் வேலூர் கூட்டத்தில்
இதற்கு சூசக அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வேலூர் அகரம்சேரியில் வரும் 23ம் தேதி தவெக
தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு முதல்முறையாக விஜய் மக்கள்
சந்திப்பு நிகழ்ச்சிக்காக பந்தல் அமைத்து 5,000 நாற்காலிகள் போடப்பட்டு தண்ணீர் பாட்டில்
வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வெயிலின்
தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அப்படியொரு நிகழ்வு நடக்கக்கூடாது
என்பதில் விஜய் கட்சியினர் உறுதியாக இருக்கிறார்கள்.
விஜய் கட்சிக்குத்தான் எத்தனை சிக்கல்.
