Share via:
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம் என்று எடப்பாடி
பழனிசாமி நேற்று விடுத்த அறிக்கையும், எம்.எல்.ஏ. பதவியை பறிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையும்
வேலுமணி – சிவி சண்முகம் குரூப்பை ஆட்டம் காண வைத்துவிட்டது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர
முடியாது என்பதால் விஜய் தரப்பு அதிமுகவில் ஆதரவு கொடுத்தவர்களுக்கு எல்லா உதவிகளும்
செய்யத்தயார் ஆனால், அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை. தேர்தலில் நில்லுங்கள், ஜெயிக்க
வைக்கிறோம் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாம்.
25 எம்எல்ஏக்களுக்கும் திரும்பவும் தேர்தலை சந்திக்க விருப்பம்
இல்லாததால் கோரிக்கையினை பரிசீலிக்கிறோம் என்று சொல்லி திரும்ப வந்துள்ளனர். பத்துக்கும்
மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஒருவேளை தேர்தலில் தோற்றுப் போனால் எம்எல்ஏ பதவியும் பறிபோகும்,
அதிமுகவுக்குள் திரும்ப நுழையவே முடியாத சுழலை உருவாகும். ஆதலால் எடப்பாடியாரை சந்தித்து
திரும்பவும் கட்சிக்குள் இணைய முடிவு செய்து தூது விடத்தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வேலுமணியும் டோட்டல் சரண்டராகி அறிக்கை விட்டுள்ளார்.
அதில், ‘’கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி
ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின்
பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும்,
தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள்.
தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள்
ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை
பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும்
எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால்,
பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின்
எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத்
தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று
தான் – “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று
ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இம்புட்டுத்தானா உங்க எதிர்ப்பு..?
