News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

மோடி ஏற்கெனவே சூசகமாக அறிவித்தபடி இன்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாகவே இந்த விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 3.10 அதிகரித்துள்ளது 103.90 தற்போதைய விலை டீசல் விலை 3.08 உயர்ந்துள்ளது. டீசல் தற்போதைய விலை. 95.47 உயர்ந்துள்ளது.

மத்திய அரசு அதிகரித்துள்ள பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு முதல்வர் விஜய் குறைப்பாரா அல்லது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், தமிழ்நாட்டில் திமுக அரசு, 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மாநில வரியைக் குறைத்து, லிட்டருக்கு 3 விலை குறைப்பை அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டது. இது 2.6 கோடி இருசக்கர வாகனப் பயனாளிகளுக்குப் பயனளிக்கும் என அரசு தெரிவித்தது.

அதே நேரத்தில் டீசல் விலையை குறைக்காமல் இருந்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது ஏற்கனவே மக்கள் பெரும் துயரை சந்திக்கப் போகும் நிலையில் அதை தடுக்க பெட்ரோல் டீசல் விலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் குறைப்பார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த விலை உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி, ‘’பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனம்.. ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது.

இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மோடியும் விஜய்யும் என்ன செய்யப்போகிறார்கள்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link