News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இப்போது 17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலர் எஸ்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு:

ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இப்போது நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கும், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பி.அமுதா இப்போது கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் சத்யபிரத சாஹு இப்போது நீர்வளத் துறைக்கும், போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு இப்போது பொதுப் பணித் துறைக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுன்சோங்கம் ஜடக் சிரு இயற்கை வளங்கள் துறை செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். தமிழ்நாடு கனிம வள நிறுவன இயக்குநர் அனில் மேஷ்ராம் இப்போது மின்துறை செயலராகவும், மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையர் எம்.வள்ளலார் இப்போது போக்குவரத்து துறை செயலராகவும், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த கே.எஸ்.பழனிசாமி இப்போது வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் துறை முன்னாள் செயலர் வி.தட்சிணாமூர்த்தி இப்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலராகவும், திட்டம், வளர்ச்சித் துறை செயலர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் இப்போது இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதித் துறை செலவினப் பிரிவு செயலர் பிரசாந்த் மு.வடநரே இப்போது ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை செயலராகவும், நிதித் துறை சிறப்பு செயலர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் இப்போது பதிவுத் துறை தலைவராகவும், முன்னாள் முதல்வரின் இணை செயலராக இருந்த ஜி.லட்சுமிபதி இப்போது நிதித் துறை இணை செயலராகவும், ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் டி.ஆனந்த் இப்போது சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ஏ.ஆர்.ராகுல்நாத் இப்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் ஜி.எஸ்.சமீரன் இப்போது சென்னை மாநகராட்சி ஆணையராகவும், முன்னாள் துணை முதல்வரின் கூடுதல் செயலராக இருந்த எம்.ஆர்த்தி இப்போது பெண்கள் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராகவும், பதிவுத் துறை தலைவராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளன

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link