Share via:
பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருந்து வெளியேற்ற
வேண்டும் என்று வேலுமணி டீம் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில், இன்று மாவட்டச்
செயலாளர்கள் கூட்டம் கூடி அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் அதிமுகவினரை குதிரை பேரத்தில் பிடித்த விஜய்யை துஷ்ட
சக்தி என்று வர்ணித்து கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். தூய சக்தி என்று தன்னை சொல்லிக்
கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்ள திமுக கூட்டணி கட்சிகளின்
கால்களில் நேரடியாக விழுந்துள்ளது என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சாடல் தூய சக்தி
துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியலை நடத்தி அதிமுகவின் முதுகில் குத்திவிட்டதாகவும்
விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் அவர், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,
ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள்
வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன்
ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன.
இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம்
அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும்
உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம்
நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது
என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு ஆட்சி அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும்
கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது
கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின்
ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா
ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்..’’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், அதிமுக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும்
10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை விலைபேசி வருகிறார் லாட்டரி மார்ட்டின் மனைவி
லீமா ரோஸ் என்று ஒரு தகவல் உலா வருகிறது.
என்னமோ நடக்கிறது.