News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் சாணக்கியா சேனலில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக முன்பு பெற்ற வாக்குகளும் பாஜக கூட்டணியின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைப்பதால் 39% வாக்குகள் அள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதால் அந்த கூட்டணி வாக்கு விகிதம் 46%ல் இருந்து 36% ஆகிவிடும் என்பதால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

அதாவது சாணக்யா கருத்து கணிப்பு படி, 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், திமுக 2026 இல் கிட்டத்தட்ட 11% வாக்குகளையும், 2021 சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 10% வாக்குகளையும் பறிகொடுக்கிறது. அதேவேளை அதிமுக + பாஜக 2021 இல் வாங்கிய 39% வாக்குகளை அப்படியே தக்க வைக்கிறது என்கிறார்.

அதேநேரம் அதிமுக கூட்டணி என்பது பாஜக, பாமக, தேமுதிக, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் உள்ளடங்கியவை என்கிறார். அதோடு விஜய்க்கு 20% வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லும் பாண்டே நாம் தமிழர் வாக்கு 8%ல் இருந்து 4% ஆக குறைந்துவிடும் என்கிறார்.

இதுவரை வெளியான பல்வேறு சர்வேக்களில் விஜய் கட்சிக்கு 8% கொடுத்திருக்கும் நிலையில், அவருக்கு 20 சதவீதம் கொடுத்து, அத்தனை வாக்குகளும் திமுகவில் இருந்து வருவதாக கணக்கு காட்டியிருக்கிறார் பாண்டே.

எப்படியோ விஜய்யும் அதிமுகவும் குஷியில் இருந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link