Share via:
முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டு பார்த்து படிப்பார். அதேபோல்
விஜய் ஏ4 சீட் பார்த்து படித்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. எல்லாவற்றையும்
எழுதி வைப்பது பிரச்னையில்லை, இதையுமா என்று அவரது ரசிகர்களே ஆதங்கப்படுகிறார்கள்.
ஏனென்றால், அவர் எழுதி வைத்தது இதுதான். மதுரை கிழக்கு வேட்பாளர்:
விஜய் மதுரை மேற்கு வேட்பாளர்: விஜய் மதுரை வடக்கு வேட்பாளர்: விஜய் 234 தோகுதிகளிலும்
வேட்பாளர்: விஜய். இதையுமே எழுதிப்படிக்க வேண்டும்?
அதேநேரம், விஜய் மாநாட்டில் எவ்வளவு சேதாரம் என்று ஒரு கணக்கு
போட்டிருக்கிறார்கள். அதாவது, விஜய் மாநாடு நடைபெற்று முடிந்த இடத்தில் இருந்த 200
இரும்பு ராடுகளைக் காணவில்லை என்கிறார்கள். 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து
தூக்கிச் சென்றுவிட்டனர். பாதுகாப்புக்கு போட்டிருந்த தகரச் சீட்டுகளை அள்ளிச் சென்றுவிட்டனர்.
கிட்டத்தட்ட 2 ஆயிரம் சேர்கள் உடைந்துபோய்விட்டன.
அதேநேரம் மாநாட்டுக்கு ரசிகர்கள் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது
என்றும் ஒரு கேள்வி ஓடுகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள், ‘’தொலைதூர 30 மாவட்டங்களிலிருந்து
சராசரி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் தொண்டர்கள் வீதம் 6 லட்சம் பேர் வந்துள்ளனர். ஒவ்வொருவரும்
வந்துபோக , தங்குதல், உணவு என சராசரி ₹3000 வீதம்
செலவு செய்துள்ளனர்! ஆக இவர்கள் ₹180 கோடி மொத்தமாக செலவுசெய்ய அருகாமை
மாவட்ட தொண்டர்களின் ₹30,40 கோடி சேர்த்து மதுரை மாவட்ட
மாநாட்டிற்கு வந்துபோக தவெக தொண்டர்கள் தங்களது பணம் ₹210 கோடி
( US $25 Millions ) ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தங்களது தலைவரைக்காண கட்சியின்
மாநாட்டினை வெற்றிபெற செய்திட செலவழித்துள்ளார்கள்’’ என்கிறார்கள்.
இவர்கள் யாரும் செத்துப்போன ரசிகர்களைப் பற்றி கவலையே படவில்லை
என்பதுதான் சிக்கல்.