Share via:
கள் இறக்கப்பட வேண்டும் என்று பனை மரத்தில் ஏறி சீமான் போராட்டம்
நடத்திய விவகாரம் தமிழகம் முழுக்கவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாழும்
நம்மாழ்வார் என்று சீமானை நாம் தமிழர் தம்பிகள் பாராட்டிப் பேசிவருகிறார்கள்.
இந்நிலையில் பசுமைக் காவலர் பட்டத்தை தக்கவைப்பதற்கு சீமான் தொடர்ந்து
பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். இதன் ஒரு கட்டமாக நாளை திருத்தணியில் கட்டிப்பிடி
திருவிழா நடத்துகிறார். மரங்களுடன் பேசுவதும் கட்டிப்பிடிப்பதும் வளர்ச்சிக்கு மிகவும்
நல்லது என்ற இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விழா நடைபெற உள்ளது.
இது குறித்து நாம் தமிழர் அமைப்பினர், ‘’மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப்
பேசுவோம்! மரங்களின் மாநாடு மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள்
மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது! ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை
சரியாக 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை
மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடைபெறவிருக்கிறது. மானத்தமிழர்கள் எல்லாம்
மறக்காமல் கூடுவோம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வனம் செய்வோம்! மரம் மண்ணின் வரம்!
வளர்ப்பதே மனித அறம்’’ என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
மரத்தைக் கொண்டாடுகிறோம் என்று புடுங்கிறாதீங்கப்பு.