Share via:
எந்த ஒரு பதவிக்கும் தகுதி இல்லாத சோம்பேறிக் கழுதை தான் அன்புமணி
என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் பேட்டியும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மாநாடும்
பாமகவுக்குள் கடும் மோதலை உருவாக்கிவருகிறது. இந்த மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக
அன்புமணி வருகை தருவார் என்று கூறப்படுவது உண்மையான தொண்டர்களை அலற விட்டுள்ளது.
பெண்கள் முன்னேற்றம்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசு பதவிகளில்
அதிகாரத்தில் பெண்கள், பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி
பூம்புகாரில் வன்னியர் சங்கம் நடத்திடும் மாபெரும் மகளிர் பெருவிழா மாநாட்டை வரும்
10ம் தேதி நடத்துவதில் உறுதியாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
கடந்த 20 ஆண்டுகளாக அன்புமணி இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும்
நடத்திப் பழக்கமில்லாத ராமதாஸ், முதல்முறையாக அன்புமணி தயவில்லாமல் இந்த மாநாட்டை
வெற்றிகரமாக நடத்தி முடிக்க, தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநாட்டில்
3 லட்சம் மகளிர் பங்கேற்க வேண்டும் என்பது ராமதாஸின் குறிக்கோள்.
இந்த மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு கிடையாது என்று வெளிப்படையாகவே
தெரிகிறது. அன்புமணிக்கு மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களையும் ஒதுக்கிவைக்க திட்டமிட்டிருப்பதாக
தெரிகிறது. ராமதாஸ் அழைப்பு விடுக்காத நிலையிலும் மகளிர் மாநாட்டில் அன்புமணியும்
அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுவதை அடுத்து மோதலுக்கு வாய்ப்பு
அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேசும் கட்சியினர், “பாமக-வில் இதுவரை இல்லாத அளவுக்கு
மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க பூம்புகார் மகளிர் மாநாடு காரணமாக அமைந்துவிடும்.
சில கட்சியினர் இவர்களுடைய பகையை பெரிதாக்கி
ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக சவுக்கு சங்கர் இந்த மோதலை பெரிதாக்கிவருகிறார்.
ஆகவே, அடிதடி மோதலை சந்திக்க பாமக தயாராகிறது என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக தடை செய்வதே மக்களுக்கு நல்லது.