News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக அரசின் உள்ளாட்சி துறையின் கீழ் வரும் நகராட்சி மாநகராட்சி பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பும் வேலையை திமுக அரசு செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய அரசு ஊழியர் ஒருவர் “

இதோ வருது, இதோ வருது என்று எதிர்பார்த்திருந்த 20 மாநகராட்சி பணியிடங்களுக்கான அளவுகோல் அரசானையாக அரசானை 152 நாள் 20-10-2022 வந்துள்ளது. சில குறிப்பிட்ட நல்ல அம்சங்கள் உள்ள போதிலும்,  ஒட்டு மொத்த மாநகராட்சியையும் தனியாரிடம் கொடுப்பது என்ற “Single Agenda” ஐக் கருத்தில் கொண்டு இந்த அரசானை பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற ஐயப்பாடு அனைவருக்கும் உள்ளது. எனவேதான் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 3,417 ஆக இந்த அரசானையில் சுருக்கப்பட்டுள்ளது.

இனிமேல் வரி வசூலர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர், செயல் திறன் பணியாளர் நிலை 1 மற்றும் நிலை 2, செயல்திறனற்ற பணியாளர் பணியிடங்கள் கிடையாது. இப்போது இப்பணியிடங்களில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் வரை இருந்துவிட்டு போகட்டும் என்று அரசு பெருந்தன்மையுடன் அனுமதித்துள்ளது.

இனிமேல் பொது சுகாதார பிரிவில் B.Sc க்கு கீழே படித்தவர்களும், பொறியீயல் பிரிவில் டிப்ளமோவிற்கு கீழே படித்தவர்களும் மாநகராட்சியில் வேலைக்கு வர முடியாது.

நிதி நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த அரசானை பிறப்பிக்கப்பட்டதாக தெறியவில்லை. திருச்சி மாநகராட்சியில் இணை ஆணையாளர் (JD) நிலையில் ஆணையாளர் பணியிடம் இருந்தது. இது கூடுதல் இயக்குநர் (ADMA) பணியிடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது நல்ல முடிவுதான். ஆனால் இணை இயக்குநர் (JD) நிலையில் துணை ஆணையாளர் (Deputy Commissioner)  பணியிடங்கள் 2 கூடுதலாக உருவாக்கப் பட்டுள்ளது. 2 செயற்பொறியாளர் பணியிடங்கள் 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உதவியாளர்கள் பணியிட எண்ணிக்கை குறைக்கப்பட்டு கண்காணிப்பாளர் பணியிடங்களின் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது.

இந்த அரசானையில் மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், நகரசுகாதார செவிலியர்கள் பணியிடங்களும் சமுதாய அமைப்பாளர் பணியிடங்களும் இடம்பெரவில்லை. உலகமே டிஜிட்டடலாகி வருகின்ற நிலையில் தகவல் தொழிழ்நுட்ப துறைக்கு இடமில்லை.

பேருந்து நிலைய வாகன காப்பகம் போல 33 ஆயிரம் பணியிடத்தில் 30 ஆயிரம் பணியிடங்கள் குத்தகைக்கு விடப்படுமானால் தரமான சேவை மக்களுக்கு போய் சேராது. அன்றாட பிரச்சனையான குடிநீர் விநியோகமும், துப்புரவுப்பணி மேற்பார்வையும் , வரி வசூலும் தனியாரிடம் சென்றால் நிர்வாகம் மேன்மையடையாது அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் போக்கை திமுக அரசு கைவிடவில்லை என்றால் அரசு ஊழியர்களின் கோபத்தை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக சந்திக்கும் ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link