Share via:
சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பிரதமர் மோடி செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள் பட்டியலில் 76 சதவீதம் பேரின் ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
அதன்படி பிரதமர் மோடி முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் அலைன் பெர்செட் 2வது இடத்திலும் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் 7வது இடத்தில் 40 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். மேலும் தென் கொரிய அதிபர் யூன் சியோக் மற்றும் செக் குடியரசு தலைவர் பீட்ர் பால்வெல் ஆகியோருக்கு குறைந்த அளவுக்கு அங்கீகாரம் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ள செய்தி தற்போது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.