News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

எப்படியாவது மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுவிட வேண்டும் என்று ராமதாஸ் மல்லுக்கட்டினாலும் கடந்த தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதனால், மாநிலக் கட்சி வாய்ப்பு பறிபோய்விட்டது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாக மாரியுள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவால் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிரது. கடந்த 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், 21ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளுக்காக 9 அமைச்சர்கள் கொண்ட குழுவையும் திமுக தலைமை நியமித்துள்ளது. இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது.

விக்கிரவாண்டி பகுதியில் வன்னியர்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கிறார்கள் என்பதால் இந்த தொகுதியை கேட்டு வாங்கியுள்ள பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியை களம் இறக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தற்போது மாநிலக் கட்சி அந்தஸ்து இல்லை என்பதால் சுயேட்சை சின்னம் கிடைக்கவே வாய்ப்பு அதிகம். ஆகவே, மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த சின்னம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

முன்கூட்டியே கோரிக்கை வைத்திருப்பதாலும், பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாலும் மாம்பழம் கிடைப்பது உறுதி என்றே சொல்கிறார்கள். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link