News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

’கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்’ என்றும் தன்னை பெண் போலீஸார் தாக்கினார்கள் என்றும் தொடர்ச்சியாக சொல்லிவந்த சவுக்கு சங்கர் திடீரென, ‘நான் துன்புறுத்தப்படவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு நாள் போலீஸ் காவலுக்குச் சென்றுவந்த சவுக்கு சங்கர், ‘போலீஸ் விசாரணையில் நான் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை’ என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

இதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் உலாவருகின்றன. சவுக்கு சங்கர் வாங்கிய சொத்து விபரங்கள் மற்றும் பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தது போன்ற விபரங்கள் குறித்து தோண்டப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டதும் அமைதியாகிவிட்டார் என்கிறார்கள். அதிகம் பேசும்போது இன்னும் அதிகம் தோண்டப்படுவோம் என்பதால் வாயை மூடிக்கொண்டார் என்று சொல்கிறார்கள். போலீஸ் காவலில் மிரட்டப்பட்டதால் உயிருக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

அதேநேரம், சவுக்கு சங்கரின் ஆதரவாளர்களோ, நேற்றைய ஒரு நாள் விசாரணையைப் பற்றி மட்டுமே அவர் கூறியிருக்கிறார். சவுக்கு சங்கரின் குரலை ஒருபோதும் நசுக்கவே முடியாது என்கிறார்கள்.

பார்க்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link