News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சினிமா நட்சத்திரங்கள் பங்குகொள்ளும் பார்ட்டிகளில் எல்லாம் கொக்கைன் சப்ளை செய்யப்படுகிறது என்று பாடகியும் நடிகையுமான சுசித்ரா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோருக்கு போதைப் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கோரிக்கை வைத்திருப்பது கடும் அதிர்வு ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி, ‘’போதைப்பொருளின் தீமைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கும் திரைத்துறையினரே, கொக்கைன் போன்ற கொடிய போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்து இருக்கிறார்.

தளபதி விஜய், தனுஷ், நடிகை திரிஷா, ஆண்ட்ரியா, விஜய் ஏசுதாஸ், சுசித்ராவின முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோர் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கொக்கைன் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக சுசித்ரா வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

பிரபல நடிகர்கள் பற்றி ஆதாரம் இல்லாமல் சுசித்ரா கூறியிருக்க வாய்ப்பு இல்லை. சாதாரண இளைஞர்கள் கஞ்சா குடித்தாலோ, அதை விற்றாலோ அவர்களை பிடித்து சிறையில் அடைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யும் போலீஸார், இந்த விவகாரத்தில் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்? எனவே, மதுவிலக்கு அதிகாரிகள் உடனடியாக பாடகி சுசித்ராவிடம் இதுபற்றி தீர விசாரிக்க வேண்டும்.

அதன் பின்னர், அவர் கூறிய நடிகர், நடிகைகள் அனைவரிடமும் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மாஃபியா கும்பலையும் போலீஸார் கைது செய்ய வேண்டும்.’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் திரையுலகை அதிரவிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link