News

அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?

Follow Us

நடிகர் அஜித்குமாருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக வெளிவரும் தகவலால் கவலையடைந்திருக்கும் ரசிகர்கள் சென்னை மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள்.

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை வந்த அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென்று அஜித்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுஉடல்நிலையை பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துவருகின்றனர். ஓரிரு நாளில்சிகிச்சை முடிந்து அஜித்குமார் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் அஜித்துக்கு மூளை பகுதியில் சிறு வீக்கம் காணப்பட்டதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிவிட்டதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அப்போலா மருத்துவமனைக்கு விரைந்து தகவல் கேட்டு வருகிறார்கள்.

இந்த தகவல் உண்மையா என்று அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோதும், ‘வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக உள்ளது. ஓரிரு நாளில் மருத்துவ மனையிலிருந்து திரும்புவார்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link