News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூவத்தூரில் நடிகைகளை எல்லாம் கூட்டி வந்து, எம்.எல்.ஏக்களை வைத்து கும்மாளம் அடித்தார் என்கிறார் ஏ.வி ராஜூ. இவர் சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்.

இவருக்கும் சேலம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன்படி, மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருப்பார் என்ற சந்தேகம் வருகிறது என்கிறார்.

அதோடு, எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்தபோது எவ்வளவு ஊழல் செய்தார் என்று சொல்லவா… மேலும் பால், நெய்யைக் கடத்தி அவர் ஊழல் செய்தபோது நான் இயக்குனராக இருந்தேன். ஆகவே, அவர் செய்த ஊழல் அனைத்தும் எனக்குத் தெரியும் என்றார்.

என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை என்கிறார்.

அ.தி.மு.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும் பெண்களை தவறாக சித்தரிக்கும் சூழல் நிலவுகிறது என்றும் கூறியிருப்பவர் கூவத்தூரில் நடந்த அக்கப்போர்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் 25 லட்சம் ரூபாய் கொடுத்து த்ரிஷா தான் வேண்டும் என்று கேட்டார்கள். நடிகர் கருணாஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார் என்றும் கூறியிருக்கிறார். அதேநேரம் த்ரிஷா கூவத்தூருக்கு வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து த்ரிஷா எப்போது ராஜூ மீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறார் என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. அதுசரி, கருணாஸ் இந்த வேலையைத்தான் செய்தாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link