Share via:
0
Shares
மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை டிசம்பர் 11ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடத்தப்படும் என்று அட்டவணையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுமுறையை பொருத்தவரையில் டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 1ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tagged latest