News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெண்கள் தங்கும் விடுதிக்குள் திடீரென்று கார் நுழைந்து ஏற்பட்ட விபத்தில் விடுதி உரிமையாளர் பலியான சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.

 

கோவா வஹடார் பகுதியில் பெண்கள்  தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 11ம் தேதி இரவு 57 வயதான ரெமிடியா மேரி விடுதி வளாகத்தில் ரிஷப்சன் முன்பு நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். இவர் விடுதியின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது.

 

அப்போது அங்கு வேகமாக பாய்ந்து வந்த கார், விடுதி உரிமையாளரான ரெடிமியா மேரி மற்றும் ஊழியர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த ரெமிடியா மற்றும் ஊழியர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி ரெமிடியா பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதறவைக்கும் இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விடுதிக்குள் நுழைந்த காரால், விடுதி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் டிரைவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link