Share via:
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் மீண்டும் தக்காளியின் விலை உச்சத்தை தொடும் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியிலேயே அழுகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என எதுவுமே மழைக்கு தாக்குபிடிக்காமல் போனதால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் விலை மீண்டும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது இப்படியிருக்க மறுபுறம் விவசாயிகள் மீண்டும் தக்காளி செடியை நடவு செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தை மாதத்திற்கு அறுவடை செய்யப்படும் என்றும் அதுவரை தக்காளி விலை உச்சத்தில்தான் இருக்கும் என்றும் வியாபாரிகள் சூசகமாக சொல்லி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.