Share via:
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்திய பெருங்கடலில் இன்று (நவ.14) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு குடும்பத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், இலங்கையில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.