Share via:
இம்மாதம் 2 கட்டங்களாக சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. இம்முறை கண்டிப்பாக சத்தீஷ்கரின் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.
கடந்த 7ம் தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வருகிற 17ம் தேதி இரண்டாம் கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சத்தீஷ்கரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி முங்கேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘சத்தீஷ்கரில் காங்கிரசின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. காங்கிரசை விரும்பாத மக்கள் அதற்கு விடை கொடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்று பேசினார்.
ஊடகத்தினர் கூற்றுப்படி கோடிக்கணக்கில் ஊழல் செய்த முதல் மந்திரி அவர் சொந்த தொகுதியில் தோல்வியை சந்திப்பார். மகாதேவ் சூதாட்ட செயலி குறித்து பேசிய பிரதமர் மோடி, இதில் முதல் மந்திரி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
சத்தீஷ்கரில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவை பார்க்கும்போது, இங்கு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்பது தெளிவாக தெரிவாக நம்பிக்கையுடன் தெரிவித்தார்.