News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காற்று மாசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் தடையை மீறி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்துள்ள கொண்டாடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய  முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

இருப்பினும் தடையை மீறி டெல்லியின் பல பகுதிகளில் பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர். அதன்படி ஷாபூர் ஜாட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள பூங்காவிலும் பொது மக்கள் ஒன்றாக சேர்ந்து பட்டாசுகளை வெடித்தனர். மாலை 6 மணிக்கு பட்டாசு வெடித்த நிலையில், அப்பகுதிகளில் உள்ள சில கடைகளில் தடையை மீறி பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தெற்கு டெல்லியின்  கிழக்கு கைலாஷ் பகுதியிலும் ஒரு சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். 

 

பொது மக்கள் சிலர் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பொது மக்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டெல்லி காற்று மாசுபாட்டால் தத்தளித்து வரும் நிலையில், நேற்றைய தீபாவளி கொண்டாட்டத்தால் மேலும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link