News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தீபாவளி பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு இருந்து ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பண்டிகைகளை சொந்த ஊர்களில் கொண்டாட பொது மக்கள் ரெயில்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆயுதபூஜையின் போது ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 119 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.

 

தீபாவளி பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link