News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு புகழாரம் சூட்டியுள்ளார்.


வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்ற ரீதியில் பிரதான கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.


மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தலை நடத்தி முடிக்கி தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவற்றை சரி பார்த்து ஆய்வு மேற்கொள்ள மாநில தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி தமிழகத்தை பொறுத்த வரையில் வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ள முகாம்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள சரிபார்ப்பு பணிகளும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபர், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ.9) நடைபெற்றது.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசும்போது, ‘‘மக்களவை தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகிற ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் அதிகளவில் வந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link