Share via:
மத்தியபிரதேசத்துல நடந்த தேர்தல் பிரசார மேடையில தொண்டர் ஒருத்தர் செய்த செய்கையை பார்த்த பிரியங்கா காந்தி விழுந்து விழுந்து சிரிச்ச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேசத்திற்கு வருகிற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் மத்தியபிரதேசம் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
அப்போது ஒரு காங்கிரஸ் மூத்த நிர்வாகி, பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். அதை வாங்கிய பிரியங்கா பூங்கொத்துக்குள்ளே பூக்களே இல்லை என்பதை கவனித்து அந்த நிர்வாகியிடம், ‘‘என்ன பூங்கொத்துக்கு உள்ளே பூக்களே இல்லையே?’’ என்று கேட்டு விட்டுசிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
என்ன இது மரியாதை நிமித்தமாக கொடுக்கப்பட்டது இப்படியாகிவிட்டதே என்று மேடையில் இருந்த நிர்வாகிகள் பதறிப்போக பிரியங்கா காந்தி மட்டும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை பிரியங்கா காந்தி தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உணர்ந்த பின்னர்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.