News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நீதிமன்றங்களில் திமுக எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், பணிந்துபோக அரசு தயாராக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவதற்கு திமுக முழு அளவில் தயாராகி இருக்கிறது.

ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. ஆக, இரண்டு கும்பலும் எதிர்ப்புக் குரல் கொடுப்பது உறுதியாகியுள்ளது.

அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், ‘’கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை;100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளது; அதன்படியே அரசு செயல்படுகிறது புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை விர்க்கவே, அங்கு அனுமதி அளிப்பது இல்லை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது

சிவில் நீதிமன்றத்துக்குரிய இவ்வழக்கை HC எடுத்தது தவறு, விசாரித்த முறை தவறு, 2 நீதிபதி தீர்ப்பை மீறிய இத்தீர்ப்பே தவறு, அப்பீலுக்கு நேரம் தர மறுத்தது தவறு, தீர்ப்பை அமல்படுத்த CISF ஐ ஏவியது தவறு…’’ என்று தடை உத்தரவு கேட்கிறது.

இந்நிலையில் இன்று காலை ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருகிறது. மாநில அரசு விளக்கு ஏற்றப்போவதில்லை என்பதால் நீதிபதியே நேரடியாக களத்திற்குச் சென்று விளக்கு ஏற்ற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

கார்த்திகை தீபத்தில் கலவரப் புகை வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link