Share via:
பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்பு நடந்தபிறகு
அதிமுகவில் இருந்து தொகுதிப் பங்கீடு என்று எண்ணிக்கை பரவியது. தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்ட
எண்ணிக்கையைக் கண்டு பிரேமலதா கொதித்துப் போய் சாபம் கொடுத்திருக்கிறார்.
அதிமுக தரப்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு
என்று ஒரு பட்டியல் வெளியானது. அதில் அதிமுகவுக்கு
170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6
தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள், வாசன் உள்ளிட்ட பிற
கட்சிகளுக்கு 3 தொகுதிகள் என கூறப்பட்டிருந்தது.
இதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி
பேரைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது என்று பேசியிருந்தார். அதேநேரம் டிடிவி தினகரன்
இது வெறுமனே யூகம் என்று கடந்துபோனார். பாஜகவும் பொய் செய்தி என்று அமைதியாகிவிட்டது.
ஆனால் பிரேமலதா, ’’அதிமுக
கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் என்பது வெறும் வதந்தி. யாரும் இதனை நம்பவேண்டாம்.
வெறும் 6 இடங்கள் எனத் தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது’’ என்று
சாபம் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய்காந்த் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்
என்று ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய்க்கும்
அழைப்பு போகிறது. அதாவது ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்
பிரேமலதா.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வழியே இல்லாமல் டிடிவி தினகரனிடம்
விழுந்தது போல் அவமானப்பட்டுவிட வேண்டாம் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள்.