News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

அதிமுக அதிகாரபூர்வ சேனலான நியூஸ் ஜெ இப்போது சி.வி.சண்முகம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து தலைமைக் கழகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர திட்டம் தீட்டுகிறது சி.வி.சண்முகம் தரப்பு. இதையடுத்து ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, உள்ளிட்ட நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. மேலும் அதிமுகவில் 17 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத சி.வி.சண்முகம் தரப்பு, ‘’கட்சிக்குள் முரண்பாடுகள் வந்துவிட்டதால் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. எங்களை நீக்குவதற்கான அதிகாரம் அவருக்கு துளியும் இல்லை. எங்களை நீக்கியது செல்லாது’’ என்று கூறிவருகிறார்கள். எனவே, தலைமைக்கழகத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரத்தில் யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் நுழைய இருக்கிறார்கள். இதற்கு ஆளும் தவெக அரசு ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கே.சி.பழனிசாமி ஒரு அதிர்ச்சிதரும் தகவலைக் கூறியிருக்கிறார்.  அதில், ‘’எடப்பாடி பழனிசாமி திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக சொன்னீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த சிசிடிவி ஃபுட்டேஜ் உள்ளன.

நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்து விட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு பதில் சொல்வாரா வேலுமணி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link