News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

சட்டமன்றத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் கையெழுத்து மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு மட்டும் கையெழுத்து போட்டார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்று கூறிய நிலையில், மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதையொட்டி பேசியிருக்கும் அமைச்சர் கீர்த்தனா, ‘’அனைத்து ரேஷன் அட்டைத்தார்களுக்கும் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக வழங்கப்படும். கடந்த ஆட்சி போல ஏமாற்றமாட்டோம். கொடுத்த வாக்குறுதியின் படி அனைத்து தாய்மார்களுக்கும் தருவோம். ஆனால் அதை நிறைவேற்ற எங்களுக்கு கால அவகாசம் தேவை.

திமுகவினர் 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவைத்துவிட்டு சென்றுள்ளார்கள்; எனவே, கொஞ்சம் டைம் கொடுத்தீர்கள் என்றால், 2500 ரூபாய் மகளிர் உரிமை திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்” என்று கூறியிருக்கிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எப்படியும் 1 ஆண்டுக்கும் மேலாகும் என்று தெரிவிக்கிறார்கள்.

எப்படியோ சாத்தியமானால் சரிதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link