News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சமீபத்தில் மேடையில் பேசிய செங்கொட்டையன், ‘தவெக சின்னத்தைப் பார்த்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அது என்ன சின்னம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் ஈரோட்டில் அவர் தேர்வு செய்யும் இடங்கள் எல்லாமே அரசினால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவது சிக்கலாகிவருகிறது.

வரும் தேர்தலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உட்பட 10 சின்னங்கள் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆட்டோ அல்லது விசில் சின்னத்துக்கு பலரும் ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது, எளிதில் எல்லோரிடமும் கொண்டுபோய் சேரும் என்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

அதேநேரம், அடுத்து விஜய் கலந்துகொள்ளும் ஈரோடு நிகழ்ச்சி தள்ளிப்போகிறது. ஈரோட்டில் தன்னுடைய மாஸ் என்னவென்று காட்டுவதற்கு செங்கோட்டையன் முயற்சி செய்துவருகிறார். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வருகின்ற 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு காவல் துறை நிறைய கட்டுப்பாடுகள் விதித்தனர். இதையடுத்து 18ம் தேதி பிரசார கூட்டம் நடைபெறும் என்றும் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.  இப்போது செங்கோட்டையன் தேர்வு செய்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமாக இருப்பதால் பிரசார கூட்டம் நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, விஜயமங்கலம் சரளை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த 19 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை தவெகவினர் தேர்வு செய்துள்ளனர். இந்த நிலம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியாகும். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பரம்பரையாக இந்த கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த இடத்தை தவெகவினரோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ, பொதுக்கூட்டங்களோ, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது.

இதற்கு முன்பு இங்கு ஸ்டாலின் மீட்டிங் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி இடத்தை வாங்குவதற்கு செங்கோட்டையன் முயற்சி எடுத்துவருகிறார். அதேநேரம், அவருக்கு ஏரியாவுக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோபி நகரின் பல்வேறு பகுதிகளில் தவெக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சூழ்ச்சி வீழும். சுயநலம் சாயும்.. வெற்றி நமதே போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. போஸ்டரில் எம்.ஜி.ஆர், அண்ணா, விஜய், புஸ்சி ஆனந்த் ஆகியோர் படங்களுடன் செங்கோட்டையன் படமும் இடம் பெற்று உள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் படம் போஸ்டரில் இடம் பெறவில்லை. இதை செங்கோட்டையன் பொறுத்துக்கொண்டு அமையாகச் செல்வாரா..?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link