Share via:
காலம் காலம் காலமாக திமுகவிற்கு செல்லும் கிறிஸ்துவ வாக்குகள்
இந்த முறை விஜய் அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருக்கின்றார். இதற்காக தொடர்ந்து பல்வேறு
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க இருக்கிறாராம்.
இன்றைய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், ‘’ஒரு தாய்க்கு எல்லா
பிள்ளைகளும் ஒண்ணுதானே. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இப்படி எல்லா பண்டிகைகளையும்
ஷேர் பண்ணிக்கொள்ளும் ஊர் தானே நம் ஊர்.
வாழ்க்கை முறை வழிபாட்டு முறை வேறென்றாலும் எல்லோரும் சகோதரர்கள்
தான். அதனால் தான் நாம் அரசியலுக்கு வந்த பின்னர் கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது
ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை
மதிக்கச் சொல்லித்தரும்.
யெஸ் அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும்
ஜெயிக்கலாம். அப்படிப்பட்ட நம்பிக்கையோட பலத்தை சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கிறது,
அதில் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு இளைஞனுக்கு எதிராக தன் சொந்த சகோதரர்களே
பொறாமைப்பட்டு அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு, அப்புறம் மீண்டும் வந்து அந்நாட்டுக்கே
அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமின்றி, அந்த நாட்டையே எப்படிக் காப்பாற்றினார்
என்ற இண்ட்ரஸ்டிங் கதைகளெல்லாம் பைபிளில் உள்ளது படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.
அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லித் தெரிய
வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் எதை உண்ர்த்துகிறது என்றால் கடவுள்
அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கிற அந்த அன்பும், அதீத வலிமையும், அதுக்கான உழைப்பும்
இருந்தாலே போதும் எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம்.
இந்த விழாவில் நான் உறுதி ஒன்றைக் கொடுக்கிறேன், நாமும் தவெகவும்
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம். அதில் எந்த விதமான
காம்பிரமைஸும் இருக்காது. அதற்காக கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூகநீதி என்று பேரு
வைத்ததே இந்த உறுதியால்தான்.
கண்டிப்பாக ஒரு ஒளி ஒன்று பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும்.
இங்கு வந்திருக்கும் அருளாளர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
அனைத்துப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே, பிரைஸ் த லார்டு, கான்ஃபிடென்டா இருங்க,
நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்…’’ என்று பேசியிருக்கிறார்.
கிணற்றில் தள்ளிவிட்ட சகோதரர் என்று அழகிரி – ஸ்டாலின் பஞ்சாயத்தை
சொல்வதாக குறிப்பிடுகிறார்கள். ஆகவே, இன்று சமூகவலைதளத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.