News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கலந்துகொள்ளும் மாபெரும் பிரசாரக் கூட்டத்திற்கு அதிகாலை 6 மணி முதலே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். வெளியேறும் நேரத்தில் பிரச்னை இல்லாமல் முடிக்கவேண்டும் என்று தவெக தலைவர்களும் போலீஸாரும் எக்கச்சக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் நடைபெறுகிறது. செங்கோட்டையன் பலத்தைக் காட்டும் வகையில் இன்று ஈரோட்டில் மெகா கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு உட்கார சேர் போடவில்லை என்பது பெரும் சலசலப்பாக மாறினாலும், ரசிகர்கள் அதற்காக கவலைப்படவில்லை.

விஜய் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பேசுவார் என்பது உறுதியாகிவிட்டது. அதற்கேற்ப இப்போதே கோவைக்கு வந்துவிட்டார். இன்று காலை புஸ்ஸி ஆனந்த்தையே போலீஸார் தடுத்து நிறுத்தும் சம்பவம் நடந்தது.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காருடன் சேர்ந்து வந்த மேற்கு மண்டல செயலாளர் ஆகியோரின் காரில் பாஸ் ஒட்டாமல் வந்ததால் போக்கு வரத்து போலிசார் நிறுத்தி உள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து போலீசாருடன் தவெக முக்கிய நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுச் செயலாளர் காரையே நிறுத்துவீர்களா என சலசலப்பு ஏற்பட்டது.

விஜய் சந்திப்பில், பெண்களுக்கென்று தனி பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பாக்ஸிலும் 80 விழுக்காட்டினர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதில் குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு மடங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த போலீஸாரால் முடியவில்லை.

விஜய் இந்த கூட்டத்தில் எப்போதும் போல் திமுகவை மட்டும் விமர்சனம் செய்வாரா அல்லது பாஜகவையும் வம்புக்கு இழுப்பாரா…? கூட்டணி அறிவிப்பு இருக்குமா என்பதெல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

செங்கோட்டையனுக்காக இந்த கூட்டமா அல்லது விஜய்க்கு வந்த கூட்டமா என்பதைத் தாண்டி, கொங்கு பகுதியில் செல்வாக்காக இருக்கும் அதிமுகவுக்கு எத்தனை சதவீதம் சேதாரம் என்பதே கேள்வி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link