Share via:
கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. அதேபோல் இன்றும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று அவசர அவசரமாக நடைபெற உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர திறக்க மறுத்து வரும் நிலையில் முழு அடைப்பு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இதன் எதிரொலியாகத்தான் தற்போது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கூட்டப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.