Share via:
அனைத்துக் கட்சியிலும் பாலியல் பொறுக்கிகள், ஊழல்வாதிகள் நிரம்பியிருப்பது சகஜம். ஆனால், விஜய் ரசிகர்களும் ரசிகைகளும் எல்லை மீறிய ஆர்வத்தில் இருப்பதும், அதை சில நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்வதும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் நடந்திருக்கிறது நாமக்கல் சம்பவம்.
நாமக்கல் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதன். என்பவர், கூட்டப்பள்ளியில் வசிக்கும் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் உள்ளே சென்று கதவை பூட்டியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்துபோன பெண் நிர்வாகியின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண்ணுடன் மாவட்டச் செயலாளர் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்டப் பெண்ணையும் நிர்வாகியையும் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரபரப்பாகின. இந்த நிலையில் செந்தில்நாதனை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் ரசிகர், ரசிகைகள் பேசும் விஷயங்கள் பலரையும் அதிரவைக்கிறது. அதாவது, ‘என் வீட்ல யாரும் ஓட்டுப் போடலைன்னா விஷம் வெச்சுடுவேன், யார் செத்தாலும் விஜய்யைப் பார்க்க வருவேன்’ என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இந்த அரைகுறை அறிவுள்ள விஜய் ரசிகர், ரசிகர்கள் குறித்து சமூகவலைதளத்தில் ஒரு கருத்து உலாவருகிறது. அதாவது, ’தீவிர விஜய் ஃபேன்களாக இருப்பவர்களால் விபரீத சிக்கல்கள், பெரிய அச்சம் வருகிறது.
விஜய்யை ஆசை தீர தீர பார்க்க வேண்டும். நண்பா, நண்பீ என அவர் பேசுவதை காதார கேட்க வேண்டும். அதற்காக எதையும் இழக்கத் தயாராக உள்ளார்கள். இந்த எதையும் இழக்க … இந்தச் சொல்தான் மிகவும் உறுத்துகிறது !
அதாவது நல்லொழுக்கம், நேரம், கல்வி, வேலை, பணம், குடும்பம், கணவன், காதலன், சகோதரன், அம்மா, அப்பா, குழந்தை, கை – கால், இறுதியாக உங்கள் உயிர் … இப்படி எதையும் இழக்க ரசிகர்கள் துணிகிறார்கள்.
நாமக்கல் மாவட்ட செயலாளர் என்கிற போர்வையில் தனக்கு விஜய்யுடன் மிக அதீத நெருக்கமுண்டு என்கிற வலையை விரித்து, ஓர் இஸ்லாமியப் பெண் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தவனை கையும் – காணொலியுமாகப் பிடித்திருக்கின்றனர்.
விஜய்யை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், ஏன் அவரைப் பெற்ற ஷோபா, சந்திரசேகர், விஜய்யின் மகன், மகளோ கூட சந்திக்க முடியாது. ஆமாம். அந்தளவு தனிமை விரும்பி விஜய்.
முட்டை ஓட்டுக்குள் பதுங்கிக்கொள்ளும் அவர், அவராக நினைத்து, அந்த ஓட்டை உடைத்து வெளியே வந்தால், அதைப் பார்க்க உங்களுக்கு முறையான அனுமதி இருந்தால், நீங்கள் அவரைச் சந்திக்க முடியும்…’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.