News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ என்ற நாமத்தை எழுதுபவர்கள் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு செல்வது வழக்கம். அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல் சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் அட்டகாசமான ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அது என்னவென்றால், இந்த கலாச்சார மரபுகளை உலக மயமாக்கல் திட்டத்தின் கீழ், ‘ராமகோடி (ராம ராம் என கோடி முழு எழுதுவது) எழுதுவதைப் போல் எழுதுவதை ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்.அதன்படி 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஒரு கோடி முறை கோவிந்தா நாமத்தை எழுதினால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.மேலும் 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை எழுதும் ஒரு நபருக்கும் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link