News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்தது ஏன் என்ற சர்ச்சையான கேள்விகளுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள் உரிய விளக்கங்களை முன்வைத்துள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கி மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறியது. அதைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன.

இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்கு மட்டும் தற்போது ரிசர்வ் டே கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம் மழைதான் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள், லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டநிலையில், இந்தப் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்தானால், அடுத்த நாள் போட்டி நடைபெறும். பாதி ஆட்டம் நடைபெற்று கைவிடப்பட்டால், முந்தைய நாள் போட்டி விட்ட இடத்தில் இருந்து அடுத்தநாள் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link