News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதுவும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டி.பி.ஐ. வளாகத்திற்கு சென்று இடைநிலை ஆசிரியர்களுடன் உரையாடினார்.


6வது நாள் போராட்டத்தின் போது (அக்.3) இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


திடீரென்று தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று இடைநிலை ஆசிரியர்கள் 8வது நாளான இன்றும் (அக்.5) போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் இன்று காலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிர்களையும் குண்டுகட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வெவ்வேறு பகுதியில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஒரு புறம் ஆசிரியர்களை சென்னையை விட்டு வெளியே அப்புறப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருவதால் டி.பி.ஐ. வளாகம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் புதுப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link