Share via:
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. எந்த அமைதிப்பேச்சு வார்த்தைக்கும் தலைசாய்க்காத இஸ்ரேல் ராணுவத்தை பல்வேறு நாட்டு அதிபர்கள் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
20 நாட்களை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போரில் சிக்கி இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போரால் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதியடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

