Share via:
திருவல்லிக்கேணியில் முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயதான கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த மாடு ஒன்று கஸ்தூரி ரங்கனை முட்டி தூக்கிவீசியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கஸ்தூரி ரங்கனின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்தும், அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த பலனும் இல்லை என்று பொது மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.