Share via:
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த வாரத்தில் தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து இன்று தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1.வேப்பேரி காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2.காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் தற்போது சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்
3.பிராங்க் டி.ரூபன் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம்.
4.அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக டி.ரமேஷ் நியமனம்
5.மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக புருஷோத்தமன் நியமனம் (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்)
6.நீலாங்கரை காவல் உதவி ஆணையராக பரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக பாலகிருஷ்ண பிரபு நியமனம்.
8.சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக ராஜா நியமனம்.
9.பூக்கடை காவல் உதவி ஆணையராக தட்சிணாமூர்த்தி நியமனம்.
10.சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் சரண்யா.
11.கோயம்பேடு காவல் உதவி ஆணையராக அருண் நியமனம்.
12.தியாகராயநகர் காவல் உதவி ஆணையராக சுதர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.