News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு ஆதாரங்கள்… ஜனநாயகத்தை புதைச்சுட்டாங்க

வாக்குத் திருடர்கள் என்று மோடி, அமித்ஷாவையும் தேர்தல் கமிஷனையும் ராகுல் காந்தி தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். மேடைகளில் ஓட்டுத் திருட்டு பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் புறம்தள்ளிவிடுகிறது தேர்தல் கமிஷன். நேற்று ஹரியானா தேர்தல் குறித்து பேசினார் ராகுல். ‘’வாக்கு திருட்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் இதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம், எனவே, ஹரியானாவில் ஆழமாக ஆராய முடிவு செய்தோம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை […]

ஜெ.வுக்கு சசி… விஜய்க்கு ஆதவ்..? கொதிக்கும் தவெக தொண்டர்கள்

தைரியம் இருந்தால் என் தலைவன் மேல கையை வைச்சுப் பாருங்க… ஆயுத எழுத்து படத்தில் போன்று அரசியல் புரட்சி நடக்கும் என்று தவெக மேடையில் ஆதவ் அர்ஜூனா கொந்ந்தளிப்பு விவகாரம், அவரது கட்சியினரிடையே நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. விஜய்யை விட தன்னை முன்னிலைப்படுத்தவே இந்த மேடையை ஆதவ் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும், இதற்கு முன்பு திமுகவில் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் விரட்டப்பட்டது போன்று, தவெகவில் இருந்து வெளியே அனுப்பவில்லை என்றால் கட்சிக்கு ஆபத்து என்று […]

பாண்டே சர்வேயில் அதிமுக, விஜய் அசத்தல்… நாம் தமிழருக்கு என்னாச்சு..?

ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் சாணக்கியா சேனலில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக முன்பு பெற்ற வாக்குகளும் பாஜக கூட்டணியின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைப்பதால் 39% வாக்குகள் அள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதால் அந்த கூட்டணி வாக்கு விகிதம் 46%ல் இருந்து 36% ஆகிவிடும் என்பதால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அதாவது சாணக்யா கருத்து கணிப்பு படி, 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், திமுக 2026 இல் கிட்டத்தட்ட […]

கரூரில் சிபிஐ ஆய்வு… இப்படி ஒரு சதியா..? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

கரூரில் சிபிஐ விசாரணை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பரப்புரைக்கு முன்னதாக அங்கே ஒரு பள்ளம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டருப்பதாக விஜய் ரசிகர்கள் தீவிரமாக பரப்பிவருகிறார்கள். இது உறுதியானால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் […]

விஜய் பாதுகாப்புக்கு தொண்டர் படை… ஸ்டாலின் கூட்டத்துக்கு நோ

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தான் வெளியே செல்கையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதற்காக தொண்டர் படை அமைக்கப்படுகிறது. இதனை நிர்வகிக்கும் பொதுப்புஓய்வு பெற்ற ஐஜி ரவிகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் தலைமையில் 15 ஓய்வுபெற்ற காவல்துறை  டிஎஸ்பிக்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பொது செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தொண்டர் படையை வழிநடத்தவும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வடிவமைக்கவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பிரிவு தொடங்கப்படுகிறது. […]

விஜய்யை குற்றம் சாட்டும் அஜித்..? பேட்டி சலசலப்பு

மீடியாக்களில் பேட்டி கொடுக்காத விரும்பாத அஜித் ஆங்கில ஊடகத்தில் கரூர் கொடூரத்தை பற்றி பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. கரூர் மரணத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என்பதையே அழுத்திச் சொல்லியிருக்கிறார், அதற்காகவே இந்த பேட்டி என்கிறார்கள். அந்த பேட்டியில் அஜித், ‘’கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கம் இன்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். அனைத்து உழைப்பும் எங்கள் மீது வைத்துள்ள […]

விஜய் கூட்டணிக்கு அமித்ஷா உத்தரவு..? டெல்லி வைரல்

கரூர் மக்களை சந்தித்த பிறகு விஜய் அரசியல் நகர்வுகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன. நிர்வாகக் குழு கூட்டத்தை அடுத்து விஜய்யின் ஹாட்டான அறிக்கை வெளியானது. இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி குறித்து அமித்ஷா பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிஆது.   நேற்று கட்சியின் தினசரிப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்தித்துப் பேசினார். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமை வகித்தார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் […]

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

கரூர் நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்ட விஜய் ஒரு வழியாக கடும் நெருக்கடியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு அவரது நடவடிக்கைகள் எல்லாமே செம வேகமாக இருக்கிறது. கரூர் மக்கள் சந்திப்பு நிறைவடைந்ததும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். அதில், “கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]

ஒவ்வொரு குடும்பத்துக்கும் விஜய் 5 நிமிடம் கால்ஷீட்… ஆள் மாறாட்டம் சர்ச்சை

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை நேரில் மகாபலிபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 நிமிடம் கால்ஷீட் கொடுத்து தனித்தனியாகப் பேசியிருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.   ஏற்கெனவே உயிரிழந்த 39 குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் நேற்று ஒவ்வொரு குடும்பத்தலைவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை கொடுத்து, […]

விஜய் டெல்லி சர்வே ரிசல்ட்..? புல்லரிக்கும் தவெக

கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்து ஆறுதல் சொல்கிறார் நடிகர் விஜய். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இதனை திசை திருப்பும் வகையில் ஒரு சர்வே வெளியாகியுள்ளது. அதாவது கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்க்கு செல்வாக்கு மளமளவென குறைந்துவிட்டது என்றும் அவருக்கு டெபாசிட் தேறாது என்றும் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், டெல்லியில் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கும் ரகசிய சர்வே ரிசல்ட், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. விஜய் தனியாக போட்டியிட்டால் 120 சீட் […]