அண்ணாமலைக்கு மீண்டும் அவமானம்..? இதுதான் அந்த பதவி

ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவும், இந்திய நாட்டின் பிரதமராகவும் அண்ணாமலையால் செயல்பட முடியுமா என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் ஓவராக கூவிக்கொண்டு இருந்தார்கள். அண்ணாமலைக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கப்போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், அவருக்கு வந்தே மாதரம் பாடல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சராகப் போகிறார், தேசியத் தலைவராகப் போகிறார், உள்நாட்டு அமைச்சராகப் போகிறார், ஐநா உறுப்பினராகிறார், தமிழக தேர்தல் பொறுப்பாளர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், எந்த மதிப்பும் மரியாதையும் […]
ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு ஆதாரங்கள்… ஜனநாயகத்தை புதைச்சுட்டாங்க

வாக்குத் திருடர்கள் என்று மோடி, அமித்ஷாவையும் தேர்தல் கமிஷனையும் ராகுல் காந்தி தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். மேடைகளில் ஓட்டுத் திருட்டு பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் புறம்தள்ளிவிடுகிறது தேர்தல் கமிஷன். நேற்று ஹரியானா தேர்தல் குறித்து பேசினார் ராகுல். ‘’வாக்கு திருட்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் இதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம், எனவே, ஹரியானாவில் ஆழமாக ஆராய முடிவு செய்தோம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை […]
ஜெ.வுக்கு சசி… விஜய்க்கு ஆதவ்..? கொதிக்கும் தவெக தொண்டர்கள்

தைரியம் இருந்தால் என் தலைவன் மேல கையை வைச்சுப் பாருங்க… ஆயுத எழுத்து படத்தில் போன்று அரசியல் புரட்சி நடக்கும் என்று தவெக மேடையில் ஆதவ் அர்ஜூனா கொந்ந்தளிப்பு விவகாரம், அவரது கட்சியினரிடையே நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. விஜய்யை விட தன்னை முன்னிலைப்படுத்தவே இந்த மேடையை ஆதவ் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும், இதற்கு முன்பு திமுகவில் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் விரட்டப்பட்டது போன்று, தவெகவில் இருந்து வெளியே அனுப்பவில்லை என்றால் கட்சிக்கு ஆபத்து என்று […]
பாண்டே சர்வேயில் அதிமுக, விஜய் அசத்தல்… நாம் தமிழருக்கு என்னாச்சு..?

ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் சாணக்கியா சேனலில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக முன்பு பெற்ற வாக்குகளும் பாஜக கூட்டணியின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைப்பதால் 39% வாக்குகள் அள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதால் அந்த கூட்டணி வாக்கு விகிதம் 46%ல் இருந்து 36% ஆகிவிடும் என்பதால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அதாவது சாணக்யா கருத்து கணிப்பு படி, 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், திமுக 2026 இல் கிட்டத்தட்ட […]
கோவை மாணவி பாலியல் கொடூரம். சுட்டுப் பிடித்த பிறகும் திமுக கள்ள மெளனம்..?

தமிழகத்தை கதிகலங்க வைத்திருக்கும் கோவை சட்டக்கல்லூரி மாணவிக்கு நடந்திருக்கும் பாலியல் கொடூரத்துக்கு இதுவரை திமுகவினர் யாருமே வாய் திறக்காமல் அமைதி காப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கோவை மாணவிக்கு நடந்த பாலியல் குரூரம் வெளியே கசிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர், .குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த […]
கரூரில் சிபிஐ ஆய்வு… இப்படி ஒரு சதியா..? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

கரூரில் சிபிஐ விசாரணை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பரப்புரைக்கு முன்னதாக அங்கே ஒரு பள்ளம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டருப்பதாக விஜய் ரசிகர்கள் தீவிரமாக பரப்பிவருகிறார்கள். இது உறுதியானால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் […]
கோவை மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..? கையாலாகாத ஸ்டாலினுக்குக் கண்டனம்

கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் […]
திமுக, அதிமுக பூத் கமிட்டி சீர்திருத்தம்… பெண்களை களத்தில் இறக்கும் இபிஎஸ்

எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் காரணமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவின் அடிப்படை வாக்குகளுக்கு ஆபத்து வரும் என்று கூறப்படுகிறது. வட மாநிலத்தவரை திணிக்கும் இந்த திட்டத்தை எப்படி தடுப்பது என்று இன்றைய தினம் திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவினர் ஏற்கெனவே பூத் கமிட்டிக்கு ஆள் நியமித்து பாக முகவர்கள் நியமனம் செய்திருக்கும் நிலையில் இன்று ஐ.டி. விங் கூட்டத்தை நடத்தி புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி […]
விஜய் பாதுகாப்புக்கு தொண்டர் படை… ஸ்டாலின் கூட்டத்துக்கு நோ

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தான் வெளியே செல்கையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதற்காக தொண்டர் படை அமைக்கப்படுகிறது. இதனை நிர்வகிக்கும் பொதுப்புஓய்வு பெற்ற ஐஜி ரவிகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் தலைமையில் 15 ஓய்வுபெற்ற காவல்துறை டிஎஸ்பிக்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பொது செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தொண்டர் படையை வழிநடத்தவும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வடிவமைக்கவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பிரிவு தொடங்கப்படுகிறது. […]
மோடிக்கு எதிராக போஸ்டர்கள்…. அடித்து விளையாடும் திமுக

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பேச்சை தமிழகம் முழுக்க கொண்டுபோகும் வகையில் திமுகவினர் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள். திமுகவினர் தொடர்ந்து மோடிக்கு எதிராக பரப்புரை செய்துவரும் நிலையில், நாம் தமிழர் சீமானும் கொதித்து எழுந்துள்ளார். அவர், ‘’தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது […]

