புரோ கபடியில் இன்று பெங்களூரு காளை – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் களமாடியுள்ளன . இதில் ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும் . இந்தநிலையில் , இந்த தொடரில் இன்று 2 கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நேற்று மும்பா – அரியானா அணிகள் […]
திருமாவளவனுக்கு தில் இருக்குதா..? அவன் இவன் என்று பா.ஜ.க. ஆவேசம்

திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் தனியே நின்றால் தான் பா.ஜ.க.வின் உண்மையான கள நிலவரம் தெரியவரும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கியே கிடையாது என்று திருமாவளவன் சவால் விட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக திருமாவளவன் தனியே நின்று அவரது செல்வாக்க நிரூபிக்க வேண்டும் என்பதுடன் அவன், இவன் என்று ஏகவசன்ம் பேசியிருப்பது விடுதலைச் சிறுத்தைகளைக் கொதிக்க வைத்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’2001 லிருந்து பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான், […]
ஏரோப்ளேன் இல்லாம ஏழைகளுக்கு இப்படியொரு வாக்குறுதி?! பிரதமர் மோடி சுட்ட சூப்பர் வடை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் பிரித்துக்கொடுப்போம் என்று கூறினார் மோடி. அது நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு நேரத்தில் இந்த சட்டம் தவறு என்று தெரியவந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். மக்கள் அவதிப்பட்டார்களே தவிர கருப்புப் பணமும் தீவிரவாதச் செயலும் குறையவில்லை. இப்படி மோடி தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் கொடுத்துவருவதால் அவர் பேசுவதை எல்லாம் வடை சுடுவதாகவே சொல்கிறார்கள். இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல் பிரசார […]
சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்யும் !

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது . அதில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. நவம்பர் மாதம் பிறந்த பிறகு மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று (11/11/2024)இரவு முதல் […]
தூத்துக்குடியில் விஜய் கட்சியின் வேட்பாளர் ஸ்லோனின் தாயார்…? அதிர்ச்சியில் தி.மு.க.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து க்ட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வினாலும் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வினாலும் நீதி கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி விஜய் கட்சியில் சேர்ந்திருக்கிறார் ஸ்லோனின் தாயார். இவரே விஜய் கட்சியின் வேட்பாளர் என்று தெரிய வந்திருப்பது தூத்துக்குடி தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 13 […]
இணையத்தை முடக்கிய விஜய் விசுவாசிகள்! என்ன நடந்தது தெரியுமா?

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக சேர விஜய்யின் ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் ஒரே நேரத்தில் ஆர்வம் காட்டியதால் சர்வர் முடங்கியது. இதனால் கட்சியில் சேர முயற்சித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தமிழக திராவிட கட்சிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் வகையில் அவரின் ஒவ்வொரு அசைவும் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. கட்சி தொடங்கிய ஒரே மாதத்தில் 75 […]
நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப்படை இறுதி அஞ்சலி!

கலைமாமணி டெல்லி கணேஷ் தன்வாழ் நாளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என்று எந்த கதாபாத்திரம் என்றாலும் அவரின் நடிப்பு தனிமுத்திரை பதித்துவிடும். அவர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி, நாயகன், காதலா காதலா, சங்கமம் உள்ளிட்ட எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமான தன்னால் அவர்கள் அளவுக்கு நட்சத்திர நடிகர் ஆக முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் பல பேட்டிகளில் […]
கியூபாவில் தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் !

கியூபாவில் இன்று (11/11/2024) அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது . அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது . அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பயத்தில் இருந்தனர் . அதை தொடர்ந்து அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர் […]
25 சீட்டுக்கு ஆசைப்படும் திருமாவளவன். தி.மு.க. முடிவு என்ன..?

மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை திருமாவளவன் பேசி வருகிறார். அதாவது, ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். இது கொள்கைக் கூட்டணி’ என்று சொல்கிறார். அதேநேரம், கூட்டணியை உடைக்கும் வகையில் 25 சீட் கேட்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. தினம் தினம் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வந்து இணைவதாக திருமாவளவன் செய்தி வெளியிட்டு வருகிறார். அதோடு 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கல் நியமனம் செய்து எல்லோருக்கும் பதவி கொடுத்து கட்சியை வளர்ச்சியடையச் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்கு வங்கக்கடல் இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக தகவல் , இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது . அதை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று (11/11/2024) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் கணித்தது . அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் , மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் […]

