அரசு மருத்துவமனையில் அவலம்! மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!

அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி அருகே இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக […]
டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன். இவரிடம் புற்றுநோய் பிரிவில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சொந்த விருப்பத்தின் பேரின் விக்னேஷ் தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை சந்தித்த விக்னேஷ் அவரிடம் […]
எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ் !

சென்னை அணிக்கு 5 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடினார். ஆனால் இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராய் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடினார். இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றும், அடுத்த ஆண்டு (2025)அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து 2025ஆம் […]
என்னாச்சு.. வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராப் பேசுறாரு..? எடப்பாடி கூட்டணிக்குப் போகிறாரா..?

கூட்டணிக் கட்சிகள் என்றாலே வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகளும், சாம்சங் விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களும் தி.மு.க.வுக்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதே வரிசையில் இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராக கம்பு சுற்றியிருக்கிறார். தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அவர், ‘’தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், நிலவளத்தையும் […]
கேப்டன் முகுந்துக்கு திட்டமிட்டு அவமானம்..? இப்போது போர்க் குற்றவாளி புகார்

அமரன் படத்தின் நாயகன் ஒரு பிராமணர் என்பதைக் காட்டாமல் திட்டமிட்டு ஏமாற்றினார்கள் என்ற சர்ச்சையே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் முகுந்த் போர்க் குற்றவாளி என்ற அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது பா.ஜ.க.வினர் கடுமையாகப் பாய்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். அமரன் படம் குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி, ‘’’அமரன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், ‘இந்திய இராணுவத்தின் முகத்தை பார்’ என சொல்லி சுட்டுக்கொலை […]
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் .

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் இஸ்ரேலியன் கொல்லப்பட்டனர் . இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர் . அதையடுத்து ஹமாஸ் ஆய்தக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதை தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட […]
11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை சிறையில் இருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 12) […]
மழைக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்! அசந்து போன பொதுமக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தனது ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது என்று மகிழ்ச்சியடைய நேரமே இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, எங்கே தஞ்சமடைவது, வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் என்ற வாதம் முன்வைக்கப்படும் போதிலும், பொதுமக்கள் நெகிழி பைகளையும், நெகிழி பொருட்களையும் ஆங்காங்கே வீசி, மழைநீரை உறிஞ்ச முடியாத அளவுக்கும், […]
த.வெ.க. பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு! என்ன விஷயம் தெரியுமா?

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கட்சித் தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தன்னுடைய கட்சியின் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வரப்போகும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்த கட்சியின் […]
ஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது . அதன்பின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் […]

