போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் . நுற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் […]
அரசியல் ஞான ஒளி இல்லாத ராமதாஸ்க்கு தி.மு.க. நெத்தியடி

ராமதாஸ்க்கு வேற வேலை இல்லை என்று ஸ்டாலின் சொன்னதையடுத்து வட தமிழகமே குலுங்கும் என்று பா.ம.க.வினர் பயமுறுத்தினாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து பேசிய ராமதாஸ், ‘ஸ்டாலினுக்குப் போல் எனக்குப் பிரகாசமான அரசியல் ஞான ஒளி இல்லை என்ன செய்வது?’ என்று கிண்டல் செய்திருந்தார். அதோடு ராமதாஸும் அன்புமணியும் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்று காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு […]
சீமானுக்குப் போட்டியாக வேல்முருகன்..? அரசியல் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை

மாவீரர் நாளை முன்னிட்டு வழக்கமாக திருமாவளவனும் சீமானும் மட்டுமே மேடை போட்டு பேசுவார்கள். அதன்படி மதுராந்தகத்தில் சீமான் கூட்டம் நடத்திய அதே நேரத்தில் திருச்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த கூட்டத்திலும் எக்கச்சக்கப் பேர் கலந்துகொண்டதையடுத்து யாருக்கு அதிகக் கூட்டம் என்று சமூகவலைதளத்தில் மோதல் நடந்துவருகிறது. சீமானுக்கு எதிரியாக வேல்முருகனை நிறுத்தி சச்சரவைத் தொடங்கியிருக்கிறார்கள். மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய சீமான் பேச்சுக்கள் வழக்கம் போல் வைரலாகிவருகின்றன. ‘’சேர […]
இந்திய வம்சாவளி பேராசிரியர் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக நியமனம் .

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல இடங்களை கைப்பற்றி , முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றர். இதை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமித்து வருகிற நிலையில் , அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா என்பவர் நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவை மீண்டும் சுகாதார நாடாக பட்டாச்சார்யா மற்றும் அவருடைய குழுவினர் உருவாக்குவார்கள் என டிரம்ப் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]
மாமல்லபுரத்தில் விபரீதம்: கார் மோதி 5 பெண்கள் பலி

மாமல்லபுரம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள், கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஈ.சி.ஆர். பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மாடு மேய்த்து செல்வது வழக்கம். அதன்படி இன்று (நவம்பர் 27) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்தபடி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 […]
பள்ளியில் பூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த சோகம்! என்ன நடந்தது தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா புறநகர பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற 6ம் வகுப்பு மாணவன் பயின்று வந்தான். வழக்கம் போல் மதிய உணவு நேரத்தில் வீரேன் ஜெயின் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த பூரியை சாப்பிட ஆரம்பித்தான். அதாவது தான் கொண்டு வந்த 2 பூரிகளையும் ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான். […]
மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்கிறதா..? தூண்டிவிடும் சீமான்

தமிழகத்தில் மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு இந்த தொகையை 2000 ரூபாயாக ஸ்டாலின் அறிவிப்பார் என்று சீமான் அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பது தவறான வழி காட்டுதல் என்று கூறிவந்த பா.ஜ.க.வும் இப்போது திராவிட மாடலுக்கு வந்துகவிட்டது. சமீபத்தில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா மாநில வெற்றிக்குக் காரணம் இந்த உரிமைத் தொகை என்றே சொல்ல வேண்டும். இந்த தேர்தலுக்காக […]
திருநங்கையருக்கு இப்படியொரு திட்டமா? சபாஷ், தமிழகம் முழுக்க பரவட்டும்

உணவு, உடைக்கு அடுத்து அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருப்பது வீடு. வாடகைக்கு வீடு தேடும் குடும்பஸ்தர்களுக்கே என்ன ஜாதி, என்ன மதம், எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைக்குப் பிறகும் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. இந்நிலையில், வேலை தேடி வரும் பெண்களுக்கு ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த ஸ்டாலின் அரசு, இப்போது திருநங்கையருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’பெருநகரங்களில் வீடு தேடி அலையும் போது சந்தித்த சிக்கல்களை விட, […]
மோடியைக் கேட்க தைரியம் இல்லையா? ராமதாஸை விரட்டும் உடன்பிறப்புகள்

ராமதாஸ்க்கு வேற வேலையில்லை என்று ஸ்டாலின் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென 24 மணி நேரக் கெடு விதித்து பா.ம.க.வினரும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இதற்கு ஸ்டாலின் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அமைச்சர் சேகர் பாபு, ‘மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார். இதையடுத்து வட தமிழகத்தில் பெரும் அதகளம் நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் நடக்கவில்லை. அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக டாக்டர் ராமதாஸ் […]
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (நவம்பர் 27) வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளிப் புயலாக மாற உள்ளது. சவுதி அரேபியர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு பெங்கல் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது, அது காற்றழுத்த […]

