News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணாமலை கூப்பிடவே இல்லையாம். குஷ்பூ ஆடியோ ரிலீஸ்… பனையூருக்குப் பாய்ச்சல்?

கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்தில் தி.மு.க.வில் இணைந்து கலைச் சேவையுடன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் நடிகை குஷ்பு. அவர் சேர்ந்ததும் தி.மு.க. தோற்றுப்போனது. அதன் பிறகு ஸ்டாலின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்குப் போனார். அந்த கட்சியும் தோற்றுப்போனதும் பா.ஜ.க.வுக்குப் போனார். பா.ஜ.க.வில் அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது. அதில் அவரது கல்வித்தகுதி பிரச்னையானதால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு […]

ஜோசப் விஜய் கவர்னருடன் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தை அட்டர்ஃப்ளாப். காருக்கு ஒரு வழக்குப்பதிவு?

ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதியான நடிகர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்காக தமிழக ஆளநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது எக்கச்சக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கவர்னரை சந்தித்துப் புகார் சொல்லப்போகிறார் என்றதுமே தி.மு.க.வினர், ‘’அண்ணா பல்கலைக்கழக வேந்தரான கவர்னரை கண்டித்து ஆளுநரிடம் விஜய் புகார்…’’ என்று கிண்டல் செய்தார்கள். மாநிலத்துக்குக் கவர்னர் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் விஜய் கவர்னரை சந்திப்பது சரியா..? அண்ணா பல்கலையின் பாதுகாப்புப் பொறுப்பு ஆர்.என்.ரவியிடம் இருப்பதால் நேரடியாக […]

சென்னை கல்லூரி மாணவி கொலை! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சத்யபிரியா என்ற கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர், மாணவி சத்யபிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது சண்டை முற்றி, அவரை ஒடும் ரெயிலில் இருந்து […]

வருண்குமாருக்குப் பதவி உயர்வு… சீமானுக்குச் சிக்கல் ஆரம்பம்

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு படி வருண்குமார்  மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகிய  இருவருக்கும் ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. திருச்சி எஸ்.பியாக இருந்த வருண்குமார் திருச்சி டி.ஐ.ஜியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டே  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சீமான் டீமை கலங்க வைத்திருக்கிறது. ஏனென்றால் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாரின் கிரிமினல் அவதூறு வழக்கு நாளை திருச்சியில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சீமான் நேரில் […]

கவர்னரை மிரட்டப்போகிறாரா விஜய்..? வில்லங்கம் கிளப்பும் உடன்பிறப்புகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஊரே பற்றி எரியும் நிலையிலும் அமைதியாக இருந்த நடிகர் விஜய் இன்று கைப்பட ஒரு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி கவர்னரையும் சந்தித்து நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது. இன்று விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘’அன்பு தங்கைகளே… நான் ஒரு அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். பெண்களின் பாதுகாப்பு குறித்து நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப்பயனுமில்லை என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக […]

பணியிடமாற்றம் செய்யப்பட்ட 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள்! தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி எஸ்.பி.யாக இருந்த வருண்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி.யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.யாகவும், ஏ.டி.ஜி.பி.வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தலைமையிட ஏ.டி.ஜி.பி. வினித்தேவ் வாங்கடேவுக்கு டி.ஜி.பி.யாக பதவி […]

யார் அந்த சார்..? எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை டோட்டல் சரண்டர்.  

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் பற்றி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவேன் என்று அதிரடி கிளப்பிவந்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும் தாக்குதல் நடத்திவந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாமலை உறவினர்கள் மீது ஐ.டி. ரெய்டு பாய்ந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பைக் […]

ஆளுக்கொரு பெட்டி வாங்க பா.ம.க. நாடகமா..? எடப்பாடிக்கு ராமதாஸ். அண்ணாமலைக்கு அன்புமணி.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதேனும் ஒரு கட்சியிடம் பா.ம.க.வை அடமானம் வைத்து பெட்டி வாங்கும் கட்சி என்று டாக்டர் ராமதாஸ்க்கு நல்ல பெயர் உண்டு. இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பெட்டி மட்டும் வாங்குவது போதாது, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்குவதற்காகவே ராமதாஸும் அன்புமணியும் வெளிப்படையாக மோதல் நடத்தி நாடகம் போடுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இதுகுறித்துப் பேசும் பா.ம.க. மூத்தபுள்ளி ஒருவர், ‘’கட்சி விவகாரங்களில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் அவ்வப்ப்போது மோதல் நடப்பது உண்டு. அது […]

இப்ப கட்சியை யாரு வைச்சிருக்கா..? பா.ம.க. வாரிசு சண்டையில் தலை சுற்றும் நிர்வாகிகள்

மாப்பிள்ளைக்கு சர்வ சுதந்திரம் கொடுத்திருக்கும் தி.மு.க. ஆட்சியைப் போன்று பா.ம.க.விலும் மாப்பிள்ளைக்கு அதிகாரம் கொடுக்க முயன்ற டாக்டர் ராமதாஸின் முயற்சிக்கு சொந்த மகனே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் நிர்வாகிகள் தலை சுற்றிக் கிடக்கிறார்கள். புதுச்சேரியில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். அதாவது ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் கட்சியில் இருந்து விலகியதால் காலியான அந்த பதவிக்கு முகுந்தனை […]

மேடையில் வெடித்த ராமதாஸ் அன்புமணி மோதல்!

புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில இளைஞர் அணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமித்ததை எதிர்த்து அன்புமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   இந்த முகுந்தன் என்பவர்  ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன்தான். மேலும் இவர் கட்சியில் இணைந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]