News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தீவை சூறையாடிய புயல்! 1000 பேர் பலி

சிடோ புயல் தாக்கியதில் மயோட் தீவில் 1,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   இந்திய பெருங்கடலில் மடகாஸ்ர் நாட்டின் அருகே பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மயோட் தீவு அமைந்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மக்கள் தொகை  இத்தீவில் நேற்று (டிசம்பர் 15) அதிகபயங்கர புயல் தாக்கியது. சிடோ என்று பெயரிடப்பட்ட 124 மைல் வேகத்தில் வீசிய புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து, சாலைகள், […]

இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் !

  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அது ஒரு நாள் தாமதமாக இன்று வலுப்பெறும் எனவும் இது மேலும் வலுப்பெற்று 18ஆம் தேதிக்கு மேல் மேற்கு – வடமேற்கு திசையில் , தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு .   தமிழகம் […]

எடப்பாடி பழனிசாமியுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..? திடீர் விலகல் பின்னணி

மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா, திடீரென அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் விஜய் கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. நேற்று ஆதவ் அர்ஜூனா திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய […]

மனிதர்களை குளிப்பாட்டும் AI மிஷின் புதிய கண்டுபிடிப்பு !

ஜப்பானிலிருந்து எப்போதும் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் வருவது வழக்கம். ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.   ஏ.ஐ உதவியுடன் செயல்படும் மனிதர்களுக்கான வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளனர். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நம்மை குளிப்பாட்டிவிடும் கருவி. காலையில் எழுந்து குளிக்க  இந்த கருவியில் அமர்ந்தால் போதும்  15 நிமிடங்களில் குளிக்கவைத்து சுத்தப்படுத்திவிடும் .   ஸ்பாவில் இருப்பது போன்ற அனுபவத்தைக்கொடுப்பதோடு, அதன் நவீன நீர் பாய்ச்சும் திறன், நுண்ணிய காற்று குமிழ்கள் கொண்டு பளபளவென சுத்தப்படுத்திவிடும்.   இதை தொடர்ந்து AI […]

தாடி பாலாஜி வழியில் அடுத்து புஸ்ஸி ஆனந்த் டாட்டூ குத்துவாரா..? திகிலில் விஜய் நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரத்தில் தன்னுடைய தொண்டர்கள் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதாவது கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக இப்படி உத்தரவு போட்டார். உடனே நிறைய பேர் எந்த யோசனையும் இல்லாமல் எம்.ஜி.ஆர். உருவத்தையும் சேர்த்து பச்சை குத்தினார்கள். இது மோசமான அடிமைத்தனம் என்று கடுமையான விமர்சனம் எழுந்த பிறகே எம்.ஜி.ஆர். அந்த யோசனையைக் கைவிட்டார். இப்போது விஜய் சொன்னாரோ இல்லையோ தாடி பாலாஜி அவரது உடலில் விஜய் உருவத்தைப் […]

பிராமண தோஷம் கழித்தாரா உதயநிதி? சனாதன ஒழிப்புப் போராளியின் டபுள் ஆக்ட்

ஊருக்கு உபதேசம் செய்வதில் தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே முடியாது. திராவிடம், பகுத்தறிவு என்று பேசிக்கொண்டே கோயில் கோயிலாக வீட்டுப் பெண்களை அலையவிட்டு மக்களைக் குழப்புவார்கள். அந்த வழியில் சனாதன எதிர்ப்புக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தைரியமாகப் பேசிய உதயநிதி, அதற்காக தோஷம் கழித்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி ரகம். இது குறித்து திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர், ‘’மேடையில் சனாதனத்தை டெங்கு போல ஒழிப்போம் என்று பேசினார் உதயநிதி. அவர் அப்படி பேசிய  பேச்சால் தோஷம் […]

பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்… ஈரோட்டில் மூன்றாவது இடைத்தேர்தல் நடக்குமா..?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி அடைந்த அவரது மகன் ஈவேரா திருமகன் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் நின்று வெற்றி அடைந்தார். மீண்டும் எம்.எல்.ஏ.வை இழந்து நிற்கிறது ஈரோடு கிழக்கு. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி […]

ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா… விஜய்க்கு இவ்வளவு எதிரிகளா..?

இன்று தேசிய அளவில் விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஆதரவு தெவித்து, ‘ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா’ என்ற ஹேஸ்டேக் செம டிரெண்டிங் ஆகி வருகிறது. விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர், நாம் தமிழர், ரஜினி ரசிகர்கள், அஜித் ஃபேன்ஸ் என்று ஒட்டுமொத்த கும்பலும் போட்டு புரட்டி எடுக்கிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது நீண்ட நாள் காதலருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். தனி ஃப்ளைட்டில் பறந்து சென்று ஜோடியாக […]

அதானியை ஏன் காப்பாற்றுகிறார் மோடி..? இதுக்குத்தான் ஒரே நாடு ஒரே தேர்தலா..?

நாடாளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் இத்தனை எதிர்ப்பு காட்டிய பிறகும் அதானி மீது விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வராதது சாதாரண பொதுமக்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தைக் கையில் எடுத்து அதானி விவகாரத்தில் இருந்து எதிர்க்கட்சிகளை திசை திருப்புகிறார் மோடி. இது குறித்துப்பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’இன்று இந்தியாவையே அதானிக்கு விற்கும் வேலையை தான் மோடி அரசு செய்து வருகிறது. நிலக்கரி இறக்குமதி, ஊழல் சோலார் ஊழல், […]

குகேஷை சொந்தம் கொண்டாடும் தெலுங்கு அரசியல்… சாதி கொண்டாட்டம் சரியா..?

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றதுடன் மிகவும் இளவயதில் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தமிழக அரசின் நிதியுதவியுடன் விளையாடி வெற்றி பெற்றிருக்கும் குகேஷை தெலுங்கு பையனுக்கு வாழ்த்துக்கள் என்று சந்திரபாபு நாயுடு இனம் பிரித்துக் காட்டியிருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. ஒருவர் வெற்றி பெறாத வரையிலும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர் வெற்றி பெற்று, […]