News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஓவர்..?  பட்டியல் ரெடி

வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பட்டியல் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக உலவுகிறது. அந்த பட்டியல் படி திமுக 164, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்டு 6, தேமுதிக 6 + (1 ராஜ்யசபா), பாமக (ராமதாஸ்) 4, கொ.ம.க (ஈஸ்வரன்) 3, மக்கள் நீதி மய்யம் 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் […]

திமுகவை மிரட்டும் திடீர் சகோதரர்கள். அண்ணாமலைக்கு அரோகரா.

நடக்கவே நடக்காது என்று பலரும் நினைத்தது நடந்தேவிட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துவிட்டார். இந்த திடீர் கூட்டணி திமுகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதேநேரம், பிரதமர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது, ஆதரவாளர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. மதுராந்தகம் மேடையில் எடப்பாடியும் தினகரனும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. மேடைக்குப் போன எடப்பாடி பழனிசாமி, நேரடியாக தினகரனை தேடிப்போய் சந்தித்து வணக்கம் வைத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். அது மட்டுமின்றி பிரதமர் பேச்சுக்குப் பிறகு […]

மோடி மாநாட்டில் எடப்பாடிக்கு மரியாதை.. பன்னீரை கைவிட்ட திமுக

இன்று மாலை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செம மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. மோடிக்கு இணையாக இபிஎஸ் படம் மேடையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று, ‘’மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது…’’ என்று ட்வீட் போட்டு முன்னோட்டம் கொடுத்துள்ளார். இன்று சுமார் 5 லட்சம் பேர் […]

டிடிவி தினகரனை தோற்கடிப்பாரா மாணிக்கராஜா…? அமமுகவில் சலசலப்பு

இத்தனை காலம் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜா. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக மாணிக்கராஜா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர். கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர். டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் […]

விசிலு சத்தம் கேட்குதய்யா… குஷியில் விஜய் ரசிகர்கள்

ஜனநாயகன் படம் வெளியாகாத சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே பொதுச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம், கிரிக்கெட் பேட், ஆட்டோ ஆகியவற்றில் ஒன்று ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை […]

எடப்பாடி இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு விருந்து… பன்னீர், பிரேமலதா வெயிட்டிங்

நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயிலுக்கு தடபுடல் காலை விருந்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிரதமர் மேடையில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்க விரும்புவதாக சொல்லப்பட்டாலும், அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பிரேமலதா, ராமதாஸ், பன்னீர் இல்லாமல் இதோடு கூட்டணியை முடித்துக்கொள்ளலாம் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், இன்னும் சில கட்சிகளையும் இணைத்து மெகா […]

விஜய்க்கு விசில் சிக்கல்… பொதுச்சின்னம் டென்ஷனில் தவெக

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல், கரூர் வழக்கில் விசாரணை நெருக்கடி, தேர்தல் பிரசாரம் செய்ய வெளியே வருவதற்கு இடைஞ்சல் என்று விஜய்யின் தவெகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி இருக்கும் நிலையில், பொதுச்சின்னம் பெறுவதிலும் சிக்கல் இருப்பது தவெகவினரை அதிர வைத்துள்ளது. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அதாவது தேர்தல் கமிஷன் சின்னம் விஷயத்தில் விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். விதிமுறைப்படி ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட கட்சியாக […]

மோடியிடம் சரண்டரான டிடிவி தினகரன்…. அடுத்தது சசிகலா..?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை கூட்டணிக்குப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்த டிடிவி தினகரன் இன்று எந்த நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘’அமமுகவுக்கு மாத்திரமல்ல தமிழ்நாட்டுக்கே நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் நாங்களும் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகிற ஒரு நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக இப்போது நாங்கள் புறப்பட்டு செல்கிறோம். ஒண்ணே […]

அமைச்சர் நேருக்கு ஜெயில் ரெடி..? கைவிடுகிறாரா உதயநிதி..?

வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கியப் புள்ளிகளில் பலர் சிறையில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கூட்டங்களில் பேசிவருகிறார். அப்படி இபிஎஸ் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அமலாக்கத்துறை நடவடிக்கை வேகமெடுத்துவருகிறது. இந்த நிலையில் நேரு கைதானால் அன்பில் மகேஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று திமுகவே அமைதி காப்பாதாக ஒரு செய்தி வெளியாகிறது. அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை பணி நியமனத்தில் 888 கோடி ஊழல் என்று முதல் […]

வைத்திலிங்கத்தால் அரசியல் அனாதையான பன்னீர்…  சாமியாராகப் போகிறாரா..?

ஆதரவாளர்கள் எல்லோரும் வெளியேறிய பிறகும் தனக்கு வைத்திலிங்கம் துணையாக இருப்பார் என்று பன்னீர்செல்வம் மலை போல் நம்பிக்கொண்டு இருந்தார். அவரும் இன்று பன்னீருக்கு டாட்டா காட்டிவிட்டார். இதையடுத்து திமுகவுக்குப் போவதா அல்லது சாமியாராகிவிடுவதா என்று பன்னீர் யோசிப்பதாகத் தகவல். ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இன்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட […]