News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இறைதூதருக்கு சீமான் அவமானம்..? கொதிக்கும் இஸ்லாமியர்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியென்றாலும் தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு கட்சிகளை இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில்லை. அதனால் இஸ்லாமியர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்த காரணத்தாலே அண்ணாமலை வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கோவையில் பிரசாரம் செய்கிறார். அதே பாணியில் சீமான் இறைதூதர் குறித்துப் பேசியிருப்பது கடும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பேசிய சீமான், ‘’இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுடைய ஆறாவது கடமை தி.மு.க.வுக்கு வாக்கலிப்பது என்ற […]

அண்ணாமலைக்கு வில்லங்கமான ஆறு கேள்விகள்… பதில் சொல்ல தில்லு இருக்குதா..?

ஒரு காலத்தில் அண்ணாமலையின் ஆதரவாளராக வலம் வந்தவர் திருச்சி சூர்யா. தமிழிசை செளந்தரராஜனை ரவுண்டு கட்டி அடித்ததில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அவர் அண்ணாமலைக்கு வில்லனாக மாறி வில்லங்கக் கேள்விகள் எழுப்பியிருக்கிறார். ஸ்டாலின், சீமானை எல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யும் அண்ணாமலை இதுவரை திருச்சி சூர்யா கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். இதற்காவது பதில் சொல்வாரா என்று பார்க்கலாம். திருச்சி சூர்யா இன்று, ‘’அண்ணாமலை அண்ணனுக்கு வணக்கங்க. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற […]

என்ன கொடுமை இது அமித்ஷா..? அம்பேத்கர் இல்லாமல் அரசமைப்புச் சட்டமா..?

அம்பேத்கரை அமித்ஷா அவமதிப்பு செய்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடங்கிவிட்டது. அதேநேரம், ‘’ மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அம்பேத்கருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதைகளும் கிடைக்கிறது. உண்மையில் அம்பேத்கரை கொண்டாடுவது பாஜகவும், மோடியும் மட்டும் தான்…’’ என்று அமித்ஷா அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால், சொல் ஒன்று செயல் ஒன்று என்பதற்கு உதாரணமாகவே மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள […]

கோவையில் கலவர அபாயம்…? அண்ணாமலை கைதுக்கு ரகளை

  கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷா உடலை மாபெரும் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்த விவகாரத்தை பா.ஜ.க. தீவிரமாக எடுத்து போராடி வருகிறது. பாஷா எனும் தீவிரவாதியை தியாகியாக மாற்றும் போக்குக்கு எதிராக கோவையில் திமுக அரசைக் கண்டித்து கருப்பு தின பேரணியில் கலந்துகொண்டார் அண்ணாமலை. இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. […]

நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை! அதிர்ச்சி தகவல்கள்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற நுழைவுவாயிலில் இளைஞர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.   நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நீதிமன்றத்திற்கு தினந்தோறும் பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரும் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தார்.   மாயாண்டியை […]

அஸ்வினை அவமானப்படுத்தியது யார்..? தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அவமானத்தால் அவர் ஓய்வு அறிவித்திருப்பதாக தெரியவந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடருக்கு இடையே அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டதால், இதையொட்டி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, அஸ்வின் இந்த தொடரில் ஆடுவதற்கு விருப்பமாக இருந்தார். ஆனால் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்திய […]

அதானி விவகாரத்தை திசை திருப்ப அடேங்கப்பா நாடகங்கள்… அடுத்தது ராகுல் கைது..?

நாடாளுமன்றம் கூடியதும் அதானி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார்கள். மக்களவையில் மெஜாரிட்டி இல்லை, இந்த மசோதா நிறைவேற வழியில்லை என்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே இதனைக் கொண்டுவந்து இந்தியா முழுக்க பெரும் பதற்றத்தை உருவாக்கினார்கள். அந்த மசோதா நிறைவேறாமல் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்குச் சென்றது. அதனால் தேவையில்லாமல் அம்பேத்கரைப் பற்றி பேசினார் அமித்ஷா. உடனே அம்பேத்கர் […]

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! இலவசமாக வழங்க முடிவு!

உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.    மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் […]

மொசாம்பிக் நாட்டையே புரட்டிப் போட்ட சூறாவளி அதிர்ச்சி தகவல்.

  மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை  சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது .   இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர் . 319 பேர் காயமடைந்து உள்ளனர்  சூறாவளியால், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்தநாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து […]

எலி கடித்ததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவியை 15 முறை தொடர்ந்து எலி கடித்ததால் அவரது கை மற்றும் கால் செயலிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள கம்மம், தானவாய் குடத்தில் பி.சி. நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி பவானி கீர்த்தி என்ற 10ம் வகுப்பு மாணவி தங்கி படித்து வந்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் மாணவியை 15 […]